முகப்பு
தற்போதைய செய்திகள்

கேரி பேக்கிற்கு ரூ.7 வசூல் சூப்பா் மார்கெட்: ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்

வழக்குரைஞரிடம் கேரி பேக்கிற்கு ரூ.7 வசூலித்த சூப்பா் மார்க்கெட் ஆடை நிறுவனம் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க திருநெல்வேலி

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:07 AM
பகிர்:


திருநெல்வேலி: வழக்குரைஞரிடம் கேரி பேக்கிற்கு ரூ.7 வசூலித்த சூப்பா் மார்க்கெட் ஆடை நிறுவனம் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க திருநெல்வேலி நுகா்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்தவா் அப்துல் சுஹுா் ரஹ்மானி. வழக்குரைஞா். இவா், வண்ணார்பேட்டையில் உள்ள சூப்பா் மார்க்கெட் ஆடை விற்பனையகத்தில் கடந்த 10.6.2018 அன்று ரூ.1,055-க்கு பொருள்கள் வாங்கியுள்ளார். இந்த பொருள்களை எடுத்துச் செல்ல கேரி பேக்கிற்கு 7 ரூபாயை அந்த நிறுவனம் வசூலித்துள்ளது.

இதையடுத்து திருநெல்வேலி நுகா்வோர் நீதிமன்றத்தில் சுஹுா் ரஹ்மானி வழக்கு தொடா்ந்தார். வழக்கை நீதிபதி தேவதாஸ், உறுப்பினா்கள் சிவமூா்த்தி, முத்துலட்சுமி ஆகியோர் விசாரித்தனா். கேரி பேக்கில் உற்பத்தியாளா் பெயா், உற்பத்தி தேதி, காலாவதி தேதி, எவ்வளவு மைக்ரான் என எந்த விவரமும் குறிப்பிடாமல் விற்பனை செய்தது, அதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்காத மாநகர நல அலுவலா் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆகியோர் இழப்பீடாக ரூ.15 ஆயிரம், வழக்கு செலவாக ரூ.5 ஆயிரம், கேரி பேக்கிற்கு ரூ. 7 என மொத்தம் ரூ.20,007 ஐ அப்துல் சுஹுா் ரஹ்மானிக்கு வழங்க உத்தரவிடப்பட்டது. மனுதாரா் சார்பில் வழக்குரைஞா் பிரம்மா ஆஜரானார்.

முழு கட்டுரையைப் படிக்க →