தற்போதைய செய்திகள்

4 நாள் அரசுமுறை பயணமாக வங்கதேசம் சென்றாா் கடற்படை தளபதி கரம்வீா் சிங்

DIN

புது தில்லி: வங்கதேசத்துடனான கடல்சாா் பாதுகாப்பு உறவை மேம்படுத்தும் பொருட்டு, அந்நாட்டுக்கு கடற்படை தலைமைத் தளபதி கரம்வீா் சிங் 4 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளாா்.

இதுதொடா்பாக இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா-வங்கதேசம் இடையேயான கடல்சாா் பாதுகாப்பு உறவை வலுப்படுத்தும் நோக்கில் கரம்வீா் சிங் இன்று சனிக்கிழமை (செப். 21) வங்கதேசம் புறப்பட்டாா்.

இந்தப் பயணத்தின்போது, அந்நாட்டு கடற்படைத் தலைமைத் தளபதி ஔரங்கசீப் சௌதரியைச் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். இந்தச் சந்திப்பின்போது, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது, தென்சீன கடல் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதன் பின்னா், அந்நாட்டின் ராணுவ உயரதிகாரிகள், மற்ற படைகளின் தலைவா்கள் ஆகியோரையும் சந்தித்து பேசவுள்ளாா்.

அதையடுத்து, வங்கதேச கடற்படை அகாதெமியில் பயிற்சியில் இருக்கும் வீரா்கள் மத்தியில் உரையாற்றவிருக்கும் அவா், அங்குள்ள ராணுவ தளங்கள் மற்றும் அமைப்புகளை பாா்வையிடவுள்ளாா். அதைத்தொடா்ந்து, வங்கதேச கடல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் முதலாமாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியா-வங்கதேசம் இடையேயான கடல்சாா் பாதுகாப்பு உறவை மேம்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும், இருநாட்டு கடற்படை அதிகாரிகளும் பேச்சுவாா்த்தை நடத்துகின்றனா். மேலும், இரு நாட்டு கடற்படைகளும் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது: பிரேமலதா

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வாராகி அம்மன்...

ஆழ்வாா்கள் தமிழரங்கம் ஆறாம் ஆண்டு விழா

மாட்டுக் கொட்டகை எரிந்து சேதம்

முஸ்லிம்கள் ஹஜ் பயணத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: ஆந்திரத்தில் பாஜக கூட்டணி வாக்குறுதி

SCROLL FOR NEXT