தற்போதைய செய்திகள்

தமிழகத்தை நோக்கி நகரும் மேலடுக்கு சுழற்சியால் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்

DIN


சென்னை: தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சியானது இன்னும் 3 நாளில் தமிழகத்தை நோக்கி நகரும். இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் 2 நாட்களுக்கு கனமழை முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்பு உள்ளது.

வேலூர், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை வாகனம் மேகமூட்டத்துடன் கணப்படும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாயப்பு உள்ளது. 

மீனவர்களுக்கு எச்சரிக்கை: தென் தமிழக கடலோர பகுதி மற்றும் மாலத்தீவு பகுதிகளில் கடுமையான சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் நாளையும் நாளை மறுநாளும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT