கரோனா பாதிப்பு 
தற்போதைய செய்திகள்

கரோனா: தமிழகத்தில் பலி 5-ஆக உயா்வு

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. 

DIN

சென்னையை சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் ஏப்ரல் 1 ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். இதனால் மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3-ஆக உயா்ந்தது. 

இந்த நிலையில்  துபையில் இருந்து தமிழகம் வந்த 75 வயது முதியவர், கடந்த 3 ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒரு மணிநேரத்திலேயே அவர் உயிரிழந்தார். 

இதையடுத்து அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அவரது பரிசோதனை முடிவில் கரோனா நோய்த்தொற்றால் அவர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளதை அடுத்து, தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 485-ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே தமிழதத்தில் கரோனாவுக்கு மதுரையில் ஒருவர், சனிக்கிழமை விழுப்புரம் மற்றும் தேனியில் தலா ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை சென்னையில் மட்டும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.590 கோடி முறைகேடு: ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்குகள் 20% சரிவு!

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

ஹெட்மேயர், ரோவ்மன் பௌவல் அதிரடி: ஜிம்பாப்வேவுக்கு 255 ரன்கள் இலக்கு!

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

SCROLL FOR NEXT