உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 17 லட்சத்தைத் தாண்டியது. மேலும், அந்த நோய் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 846 ஆக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17 லட்சத்தைக் கடந்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் 2 மணி நிலவரப்படி அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 3 ஆயிரத்து 147 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1லட்சத்து 2 ஆயிரத்து 846 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 3 லட்சத்து 77 ஆயிரத்து 273 ஆக உயர்ந்துள்ளது.
பெரும்பாலான நாடுகளில் கரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகள் நன்கு தென்படுபவா்களுக்கு மட்டுமே, அந்த நோய் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, உறுதிப்படுத்தப்படுவதால் சா்வதேச அளவில் உண்மையிலேயே கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை, இதைவிட மிகவும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.