கரோனா: உலக அளவில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது
உலக அளவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோரிண் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெனீவா: உலக அளவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோரிண் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் 210-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்திக் கொண்டே வரும் நிலையில் தொற்று தடுப்புக்கான மருந்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், உலக அளவில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 32,20,847 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், 2,28,239 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 10,64,572 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, 61,669 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா திகழ்திறது.
இதற்கு அடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது மோசமான நாடுகளான ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் முறையே 2,36,899 மற்றும் 2,03,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை முறையே 24,275 மற்றும் 27,682-ஆக உள்ளது.
பிரான்சில் 1,66,420 பேரும், பிரிட்டனில் 1,65,221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை முறையே 24,087 மற்றும் 26,097-ஆக உள்ளது.