முகப்பு
தற்போதைய செய்திகள்

ராமர் கோயில் பூமி பூஜைக்காக 151 ஆறுகளில் இருந்து நீர் கொண்டுவந்த 2 சகோதரர்கள்

அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜைக்காக 151 ஆறுகளில் இருந்து சகோதரர்கள் இருவர் நீர் சேகரித்து கொண்டுவந்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
ராமர் கோயில் பூமி பூஜைக்காக 151 ஆறுகளில் இருந்து நீர் கொண்டுவந்த சகோதரர்கள்
பகிர்:

உத்தரப்பிரதேசம்: அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜைக்காக 151 ஆறுகளில் இருந்து சகோதரர்கள் இருவர் நீர் சேகரித்து கொண்டுவந்தனர்.

சுமார் 70 வயது மதிக்கத்தக்க சகோதரர்களான ராதே ஷியாம் பாண்டே, வைக்யானிக் மகாகவி திரிபாலா ஆகியோர் 1968-ஆம் ஆண்டிலிருந்தே பல்வேறு இடங்களில் பயணித்து 151 ஆறுகள் மற்றும் மூன்று கடல்களில் இருந்து நீரையும், இலங்கையின் 16 இடங்களை சேர்ந்த மண்ணையும், ராமர் கோயில் பூமி பூஜைக்காக இன்று அயோத்திக்கு கொண்டுவந்துள்ளனர்.

இது குறித்து சகோதரர்களில் ஒருவரான ராதே ஷியாம் பாண்டே கூறியதாவது, ராமருக்கு அயோத்தியில் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது பல ஆண்டு கனவாக இருந்தது. ராமர் கோயில் கட்டப்படும் என்ற நம்பிக்கையில் இந்தியாவின் பல புன்னிய நதிகளில் இருந்து நீரையும், இலங்கையில் இருந்து மண்ணையும் கொண்டுவந்துள்ளேன். ராமரின் அருளால் என்னுடைய கனவு நிறைவேற உள்ளது. இதற்காக நாங்கள் 151 நதிகள் மற்றும் 3 கடல்களில் இருந்து நீரையும், இலங்கையின் 16 இடங்களில் இருந்து மண்ணையும் இன்று கொண்டுவந்துள்ளோம் எனக் கூறினார். 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். பூமி பூஜைக்கு பிறகு ராமர் கோயில்கட்டுமானப் பணிகள் துவங்க உள்ளன. 
 
 

முழு கட்டுரையைப் படிக்க →