தற்போதைய செய்திகள்

நொய்டாவில் பெண்கள் பாதுகாப்பிற்காக இருசக்கர ரோந்து வாகன போலீஸ் படை

DIN

நொய்டா: உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் வகையில் பெண் காவல்படை உருவாக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ரோந்து பணியில் ஈடுபடும் வகையில் பெண் காவலர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் இன்று துவங்கப்பட்டது. இதனை காவல் ஆணையர் அலோக் சிங் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இதுகுறித்து பேசிய பெண்கள் பாதுகாப்பு துணை ஆணையர் பி.சிக்லா, பெண்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பெண் காவலர்கள், இருசக்கர வாகனங்களில் ரோந்துப்பணியில் ஈடுபடுவார்கள் எனக் கூறினார்.

மேலும் இதுகுறித்து அவர் பேசியபோது, எங்களிடம் 100 இரு சக்கர வாகனங்கள் உள்ளன. அவை பல்வேறு பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படும். பெண்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் 12 - 13 இருசக்கர வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும். குறைவான பகுதிகளில் 2 - 3 இருசக்கர வாகனங்கள் ரோந்தில் ஈடுபடும் என தெரிவித்தார்.

ஊரடங்கு முடிந்த பிறகு ரோந்து பணியில் ஈடுபடும் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT