தற்போதைய செய்திகள்

நவ. 3-ல் திட்டமிட்டபடி அமெரிக்க அதிபர் தேர்தல் - வெள்ளை மாளிகை

DIN

அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் 3 ஆம் தேதி திட்டமிட்டபடி அதிபர் தேர்தல் நடைபெறும் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

அதிபர் டிரம்ப் கடந்த ஜூலை 29 ஆம் தேதி தனது சுட்டரில், தபால் வாக்கு மூலம் தேர்தல் நடைபெற்றால் மோசடி நடக்க வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தார். இந்த கருத்திற்கு பல தரப்பில் இருந்து டிரம்ப் தேர்தலை தாமதப்படுத்த பார்க்கிறார் என கருத்து எழுந்தது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மெடோஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

அதிபர் டிரம்ப் கடந்த வாரம் வெளியிட்ட சுட்டரில், தபால் வாக்குகளில் மோசடி நடக்க வாய்ப்புள்ளது என்று தான் கூறினார். தேர்தலை புறக்கணிக்கும் எந்த எண்ணமும் அவருக்கு இல்லை.

நாங்கள் வருகின்ற நவம்பர் 3 ஆம் தேதி திட்டமிட்டபடி அமெரிக்க அதிபர் தேர்தலை நடத்தப் போகிறோம். அதிபர் டிரம்ப் மீண்டும் வெற்றி பெறுவார் என்று மார்க் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT