முகப்பு
தற்போதைய செய்திகள்

ராமர் கோயிலுக்காக ம.பி. காங்கிரஸ் சார்பில் 11 வெள்ளி செங்கற்கள் அனுப்பிவைப்பு

அயோத்தியில் ராமர் கோயில் பூமிபூஜை நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளதையொட்டி, மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் சார்பில்  வெள்ளியாலான 11 செங்கற்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
பகிர்:

போபால்: அயோத்தியில் ராமர் கோயில் பூமிபூஜை நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளதையொட்டி, மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் சார்பில்  வெள்ளியாலான 11 செங்கற்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர்கோயில் பூமிபூஜை ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பூமி பூஜை நிகழ்வில் பிரதமர் மோடி உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

பூமிபூஜைக்காக பல்வேறு இடங்களில் இருந்து புனித நீர், மண் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் சார்பில் வெள்ளியாலான 11 செங்கற்கள் அயோத்திக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

மேலும், மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் இல்லத்தில் அனுமன் பாராயணம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பின்னர் அவர் பேசியதாவது, மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் தொண்டர்கள் அளித்த நிதியின் மூலம் ராமர் கோயிலுக்கு 11 வெள்ளியாலான செங்கற்கள் அனுப்பப்பட்டன. நாளை (புதன் கிழமை) நாடே காத்துக்கொண்டிருந்த வரலாற்று சிறப்புமிக்க தினம். மாநில மக்களின் நலனுக்காக அனுமன் பாராயணம் நடத்தப்பட்டது என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், மக்களின் ஒத்துழைப்புடன் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளது. இராம ராஜியம் தொடங்குவதற்கான முழு பெருமையும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையே சாரும் என்று அவர் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →