முகப்பு
தற்போதைய செய்திகள்

மன்னார் வளைகுடா கடல்  பகுதியில் சூறைக் காற்று : மீன் பிடிக்க செல்ல தடை

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறைக் காற்று வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
கடல் சீற்றத்துடன் துறைமுகத்தில் மோதுவதால் 20 அடி உயரத்திற்கு சீறிபாயும் கடல் அலை
பகிர்:

ராமேசுவரம், ஆக.04: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறைக் காற்று வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர். 

ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுருத்தி உள்ளது.

இந்நிலையில், மன்னார் வளைகுடா கடலோர பகுதியான தனுஸ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட பகுதியில் வழக்கத்தை விட காற்று அதிகளவில் வீசி வருகிறது. மேலும் மீனவர்களின் பாதுகாப்பு கருதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் செவ்வாய்கிழமை தடை விதித்துள்ளனர்.

இதனால் தனுஸ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட பகுதியில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை, அந்தந்த மீன்பிடி துறைமுகங்களில் விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் விடுகளில் முடங்கி உள்ளனர். தனுஸ்கோடி பகுதியில் சூறை காற்று வீசுவதால் முகுந்தராயர்சத்திரம் பகுதியில் உள்ள துறைமுகத்தில் கடல் அலை மோதி 20 அடி உயரத்தில் வீசி வருகிறது. அந்த பகுதியில் மீனவர்கள் செல்லக்கூடாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →