தற்போதைய செய்திகள்

கர்நாடக கடலோரப் பகுதிகளில் அடுத்த 4 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு

DIN

கர்நாடகத்தின் கடலோரப்பகுதிகளில் அடுத்த 4 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கர்நாடகத்தின் பெல்காம் மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க் கிழமை) பிற்பகல் முதல் ஒருசில பகுதிகளில் பெய்தது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு உள் கர்நாடகம் மற்றும் கடலோரப் பகுதிகளில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

உடுப்பி, தக்‌ஷின கன்னடம், உத்தர கன்னடம் மற்றும் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிவ்மோகா, ஹாசன், குடகு மற்றும் சிக்கமகளூர் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்யும் என மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT