முகப்பு
தற்போதைய செய்திகள்

கரோனாவில் இருந்து மீண்டார் மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான்

மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:04 PM
கரோனாவில் இருந்து மீண்டார் மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான்
பகிர்:

மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் 7 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த ஜூலை 25-ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு போபாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிவராஜ் சிங் செளஹான் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இது குறித்து சுட்டுரையில் அவர் பதிவிட்டிருந்ததாவது, கரோனா பரிசோதனையில் எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் சிவராஜ் சிங் செளஹானுக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது 7 நாட்களுக்கு பிறகு கரோனா வைரஸ் தொற்றில் இருந்து அவர் குணமடைந்தார். முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →