முகப்பு
தற்போதைய செய்திகள்

பொன்னமராவதி: 5 நாள்கள் முழு கடையடைப்பு

பொன்னமராவதியில் அதிவேகமாக பரவி வரும் கரோனா தொற்றினை தடுக்கும் வகையில் சனிக்கிழமையிலிருந்து புதன்கிழமை வரை 5 நாள்கள் முழு கடையடைப்பு செய்ய வர்த்தகர் கழக அவசர பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது

Updated On : 7 ஆகஸ்ட், 2020 at 6:27 PM
பொன்னமராவதி: 5 நாள்கள் முழு கடையடைப்பு
பகிர்:

பொன்னமராவதி, ஆக 7: பொன்னமராவதியில் அதிவேகமாக பரவி வரும் கரோனா தொற்றினை தடுக்கும் வகையில் சனிக்கிழமையிலிருந்து புதன்கிழமை வரை 5 நாள்கள் முழு கடையடைப்பு செய்ய வர்த்தகர் கழக அவசர பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பொன்னமராவதி பேரூராட்சிக்குள்ப்பட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக அதிவேகமாக கரோனா தொற்று பரவி வருகிறது. இத்தொற்று பாதிக்கப்பட்டு பேரூராட்சிப்பகுதியில் கடந்த மூன்று நாள்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

வணிகர்களும் இத்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வர்த்தகர் கழக அவசர பொதுக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Advertisement

கூட்டத்திற்கு வர்த்தக கழக தலைவர் எஸ்கேஎஸ்.பழனியப்பன் தலைமைவகித்தார். செயலர் எம்.முகமது அப்துல்லா, பொருளர் பிஏஎல்.தேனப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பொன்னமராவதி பேரூராட்சிப் பகுதியில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 8ம்தேதி சனிக்கிழமை முதல் 12ம் தேதி புதன்கிழமை வரை பால் மற்றும் மருந்தகங்கள் தவிர அனைத்து வணிக நிறுவனங்களும் முழு கடையடைப்பு செய்வதென தீர்மானிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.