தற்போதைய செய்திகள்

தேனி: ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கரோனா தடுப்பு பொருள்களை திமுக வழங்கியது

DIN

கம்பம், ஆக. 7 : தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள கரோனா தடுப்பு உபகரணங்கள் மாவட்ட தி.மு.க. சார்பில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் கரோனா தனி பிரிவு வார்டில், நோய் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாவட்ட, கம்பம் நகர  தி.மு.க. சார்பில் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான கரோனா தடுப்பு பொருட்களான, உடைகள், முககவசம், பாதுகாப்பு கண்ணாடி, உணவு பாத்திரங்கள் மற்றும் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கியது.

மாவட்ட பொறுப்பாளர் என்.ராமகிருஷ்ணன், தலைமை மருத்துவர் ஜெ.பொன்னரசனிடம் வெள்ளிக்கிழமை வழங்கினார். அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் பெற்றுக்கொண்டனர். நகர செயலாளர் துரை.நெப்போலியன் உள்ளிட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஜா நிறக் காரிகை!

SCROLL FOR NEXT