மேகமலை வனப்பகுதியில் கனமழை: சின்னசுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மேகமலை வனப்பகுதியில் தொடர்மழை காரணமாக சின்ன சுருளி அருவியில் வெள்ளிக்கிழமை நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
தற்போதைய செய்திகள்மேகமலை வனப்பகுதியில் கனமழை: சின்னசுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மேகமலை வனப்பகுதியில் தொடர்மழை காரணமாக சின்ன சுருளி அருவியில் வெள்ளிக்கிழமை நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மேகமலை வனப்பகுதியில் தொடர்மழை காரணமாக சின்ன சுருளி அருவியில் வெள்ளிக்கிழமை நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலைக்குண்டு அருகே கோம்பைத்தொழு பகுதியில் சின்ன சுருளி அருவி அமைந்துள்ளது. வனச்சரகத்திற்குட்பட்ட இந்த அருவிக்கு கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். மேலும் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாத காரணத்தால் அருவியில் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்பட்டது.
இந்நிலையில் மேகமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக சின்னசுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அருவியில் நீர்வரத்து வரத்து அதிகரித்துள்ளதால், சின்னசுருளி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பெறும் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை அடியோடு நீங்கியுள்ளது.
மேலும் அருவியில் குளிக்க தடை உள்ள நிலையில் அனுமதியின்றி வரும் சுற்றுலா பயணிகளை கண்காணிக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டுப்பாடுகளை மீறி அருவியில் குளிக்கச் செல்லும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.