பஞ்சாப் : மூன்று மாதத்தில் சுங்கத் துறையால் 201 வழக்குகள் பதிவு
பஞ்சாப் சுரங்க மற்றும் புவியியல் துறை சார்பில் கடந்த மூன்று மாதங்களில் சட்டவிரோதமாக சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்ட 189 நபர்கள் மீது 201 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
பஞ்சாப் சுரங்க மற்றும் புவியியல் துறை சார்பில் கடந்த மூன்று மாதங்களில் சட்டவிரோதமாக சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்ட 189 நபர்கள் மீது 201 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
இது குறித்து பஞ்சாப் சுரங்க மற்றும் புவியியல் துறை அமைச்சர் சுக்பீந்தர் சிங் சர்காரியா கூறுகையில், கடந்த மூன்று மாதங்களில் மாநிலம் முழுவதும் மொத்தம் 299 வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் சட்டவிரோத சுரங்கத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அமரீந்தர் சிங் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
சுரங்கப் பொருள்களை ஏற்றிச் செல்லப்படும் வாகனங்கள் சுரங்கத் துறையின் அனுமதிச் சீட்டை பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பெறாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது என கூறினார்.