தெலங்கானா தொழிற்துறை அமைச்சருக்கு கரோனா
தெலங்கானா மாநிலத்தின் தொழிற்துறை அமைச்சர் சமகுரா மல்லா ரெட்டு மற்றும் அவரது மனைவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:35 PM
தெலங்கானா மாநிலத்தின் தொழிற்துறை அமைச்சர் சமகுரா மல்லா ரெட்டு மற்றும் அவரது மனைவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடந்த வாரம் கரோனா பரிசோதனை செய்த அமைச்சர் மற்றும் அவரது மனைவிக்கு தொற்று இருப்பது இன்று உறுதியானது.
இதையடுத்து அவர் வெளியிட்ட ஒரு காணொளியில்,
எனக்கு எந்த ஒரு அறிகறிகளும், சிக்கலும் இல்லை. நான் ஆரோக்கியமாகவும், நலமாகவும் உள்ளேன். மேலும், கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் கவலைப்படாமல் தைரியமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன் என தெரிவித்தார்.
Advertisement