முகப்பு
தற்போதைய செய்திகள்

அருணாசல பிரதேசத்தில் புதிதாக 38 பேருக்கு கரோனா

அருணாசல பிரதேசத்தில் இன்று புதிதாக 20 பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
கோப்புப்படம்
பகிர்:

அருணாசல பிரதேசத்தில் இன்று புதிதாக 20 பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதுகுறித்து சுகாதாரத் துறை கண்காணிப்பு அதிகாரி எல்.ஜம்பா கூறுகையில்,

இன்று புதிதாக 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 2,155 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 20 பேர் பாதுகாப்புப் படை காவலர்கள் ஆவர். இதையடுத்து ஆகஸ்ட் மாதத்திலிருந்து 286 பாதுகாப்பு படாஇ வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1,482 ஆக உள்ளது. தற்போது மருத்துவமனையில் 670 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உள்ளது என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.