முகப்பு
தற்போதைய செய்திகள்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு : 5 பேர் பலி, 10 பேர் காயம்

ஆப்கானிஸ்தான் எல்லை அருகேயுள்ள பலூசிஸ்தான் மாகாணம் சாமன் நகரத்தின் ஹாஜி நிடா சந்தையில் இந்த குண்டுவெடிப்பு இன்று நிகழ்ந்ததாக காவல்துறை சார்பில் தெரிவித்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
கோப்புப்படம்
பகிர்:

இஸ்லாமாபாத், ஆக.10: ஆப்கானிஸ்தான் எல்லை அருகேயுள்ள பலூசிஸ்தான் மாகாணம் சாமன் நகரத்தின் ஹாஜி நிடா சந்தையில் இந்த குண்டுவெடிப்பு இன்று நிகழ்ந்ததாக காவல்துறை சார்பில் தெரிவித்தனர்.

இது குறித்து காவல்துறை சார்பில் கூறுகையில்,

தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த பிரிவினைவாதிகள் இந்த செயலை செய்திருக்கலாம். எந்த ஒரு அமைப்பும் இந்த குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்கவில்லை.

இந்த குண்டு வெடிப்பில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 10 பேர் பலத்த காயமடைந்தனர் என கூறினார்.

இதற்கு முன் கடந்த ஜூலை 21 ம் தேதி டர்பத் பஜாரில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 6 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →