முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்வப்னா சுரேஷின் ஜாமின் மனு தள்ளுபடி

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனுவை தேசிய புலன்விசாரணை நிறுவனத்தின் சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
ஸ்வப்னா சுரேஷின் ஜாமின் மனு தள்ளுபடி
பகிர்:

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனுவை தேசிய புலன்விசாரணை நிறுவனத்தின் சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

ஜாமின் வழங்கக் கோரி ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கு எந்த ஒரு அடிப்படையுமின்றி கற்பனையில் உருவாக்கப்பட்ட வழக்கு. மத்திய-மாநில அரசுகள் இடையேயான பிரச்சனையில் என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என கூறியிருந்தார்.

தேசிய புலன்விசாரணை நிறுவனம் நீதிமன்றத்தில் கூறுகையில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் 15 வது பிரிவின் கீழ் நேரடியாக வரும் இந்தச் செயலை குற்றம் சாட்டப்பட்டவர் வேண்டுமென்றே செய்துள்ளார் என்பதற்கு முதன்மையான ஆதாரங்கள் இருப்பதாக கூறி அதை சமர்பித்தது.

100 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கடத்தலில் ஸ்வப்னா சுரேஷின் பங்கு குறித்த ஆதாரங்களை விரிவாக ஆராய்ந்த சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது

முழு கட்டுரையைப் படிக்க →