முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுரா அருகே பேருந்து விபத்து : 4 பேர் பலி

மதுரா அருகே யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தின் மீது லாரி மோதியதில் 4 பேர் பலியாகினர், 8 பேர் படுகாயமடைந்தனர்.

Updated On : 12 ஆகஸ்ட், 2020 at 11:24 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:36 PM

மதுரா அருகே யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தின் மீது லாரி மோதியதில் 4 பேர் பலியாகினர், 8 பேர் படுகாயமடைந்தனர்.

பிகாரின் கதிஹாரில் இருந்து ஒரு தனியார் பேருந்து இன்று காலை தில்லி சென்று கொண்டிருந்தது. மதுரா அருகே சென்ற போது திடீரென்று பேருந்தில் ஏற்பட்ட கோளாரால் நடுரோட்டில் நின்றது. பேருந்தின் பின் வேகமாக வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து காலை 7.30 மணிக்கு நடந்தது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Advertisement

மேலும் காயமடைந்த 8 பேரில், ஐந்து பேர் ஆபத்தான நிலையில் மதுராவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.