முகப்பு
தற்போதைய செய்திகள்

பாதுகாப்புப் படையினரால் 4 நக்சல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் புதன்கிழமை காலை பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் நான்கு நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
பாதுகாப்புப் படையினரால் 4 நக்சல்கள் சுட்டுக் கொலை
பகிர்:


சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் புதன்கிழமை காலை பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் நான்கு நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

ஜாகர்குண்டா வனப்பகுதியில் நக்சல்களை தேடும் வேட்டையில் மாவட்ட காவல் ரிசர்வ் படை, மத்திய காவல் ரிசர்வ் படை மற்றும் கமாண்டோ படைகளைச் சேர்ந்த வீரர்கள் இந்த தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

புலாம்பர் கிராமத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்களுக்கும் பாதுகாப்புப் படை வீரர்கள் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் 4 நக்சல்களை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தேடுதல் பணி தொடர்ந்து நடைபெறுகிறது என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.