முகப்பு
தற்போதைய செய்திகள்

நேபாளத்தில் நிலச்சரிவு: 5 பேர் பலி, 37 பேர் மாயம்

நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன 37 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

Updated On : 14 ஆகஸ்ட், 2020 at 3:02 PM
நேபாளத்தில் நிலச்சரிவு: 5 பேர் பலி, 37 பேர் மாயம்
பகிர்:

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன 37 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

கனமழை காரணமாக மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. கேரளம், கர்நாடகத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதை போன்று, தற்போது நேபாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சிந்துபால்கோக் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 30-க்கும் அதிகமான வீடுகள் நிலத்தில் மறைந்தன.

இது குறித்து தகவல் அறிந்து பாதுகாப்புப் படை குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டனர். நிலச்சரிவில் சிக்கிய 5 பேரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டன. 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் இதில் காணாமல் போன 37 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Advertisement

துணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவ் பிரசாத் ஆய்வு மேற்கொண்டு கூடுதல் மீட்பு படையினரை வரவழைக்க ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.