கரோனா தடுப்பூசி : ராகுல் காந்தி வலியுறுத்தல்
இந்தியா கண்டுபிடிக்கும் கொவைட் 19 தடுப்பூசியை விநியோகம் செய்வதற்கான கொள்கையை அரசு விரைவில் வெளியிட வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந்தியா கண்டுபிடிக்கும் கொவைட் 19 தடுப்பூசியை விநியோகம் செய்வதற்கான கொள்கையை அரசு விரைவில் வெளியிட வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று ராகுல் காந்தி வெளியிட்ட சுட்டுரையில், கொவைட் 19 க்கான தடுப்பூசியை கண்டுபிடித்த நாடாக இந்தியா விரைவில் மாறும்.
அதை அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும் வகையில் விநியோகம் செய்வதற்கான கொள்கைகளை இந்திய அரசாங்கம் தற்போதே உருவாக்க வேண்டும் என கூறினார்.
கொவைட் 19 க்கான பல தடுப்பூசிகளின் சோதனைகள் இந்தியா உள்பட உலகம் முழுவதும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.