முகப்பு
தற்போதைய செய்திகள்

வைகை அணையில் 10 லட்சம் மீன் குஞ்சுகள் விற்பனை செய்ய முடிவு

வைகை அணை உள்ள மாவட்ட மீன்வளத் துறை மீன்பண்ணையில் தேவைக்கு மேல் 10 லட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு உள்ளதால் அதனை விவசாயிகள் மற்றும் தனியாருக்கு விற்பனை செய்ய உள்ளதாக

தற்போதைய செய்திகள்

வைகை அணையில் 10 லட்சம் மீன் குஞ்சுகள் விற்பனை செய்ய முடிவு

வைகை அணை உள்ள மாவட்ட மீன்வளத் துறை மீன்பண்ணையில் தேவைக்கு மேல் 10 லட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு உள்ளதால் அதனை விவசாயிகள் மற்றும் தனியாருக்கு விற்பனை செய்ய உள்ளதாக

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
பகிர்:


வைகை அணை உள்ள மாவட்ட மீன்வளத் துறை மீன்பண்ணையில் தேவைக்கு மேல் 10 லட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு உள்ளதால் அதனை விவசாயிகள் மற்றும் தனியாருக்கு விற்பனை செய்ய உள்ளதாக மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம், வைகை அணையில் மீன்வளத்துறை அலுவலகத்தில் செயல்படும் மீன்பண்ணையில் சுமார் 70 பிரமாண்ட தொட்டிகளில் மீன்குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. கட்லா, மிருகால், ரோகு வகையை சேர்ந்த மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு வளர்க்கப்படும் மீன்கள் வைகை அணை, மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகாநதி உள்ளிட்ட அணைகளில் விடப்படும். 

இந்நிலையில், இந்த ஆண்டு வைகை அணையில் 16.50 லட்சம் மீன்குஞ்சுகள் விட இலக்கு நிர்ணயித்து தற்போது வரையில் 12 லட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் மீதமுள்ள மீன்குஞ்சுகளை விரைவில் அணைகளில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது,
அணைகளில் விடப்படும் மீன் குஞ்சுகள் தேவைக்கு போக மீன்பண்ணையில் 10 லட்சத்திற்கும்அதிகமான மீன்குஞ்சுகள் இருப்பு உள்ளது. அதனை விவசாயிகள் மற்றும் தனியார் மீன்பண்ணைகளுக்கு விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்தனர். ஆயிரம் மீன்குஞ்சுகள் ரூ.500 முதல் மீன்குஞ்சுகளின் வளர்ப்புக்கு ஏற்றவாறு அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →