ராஜ்கோட் மத்திய சிறையில் புதிதாக 23 கைதிகளுக்கு கரோனா
குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மத்திய சிறையில் 23 கைதிகளுக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மத்திய சிறையில் 23 கைதிகளுக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிறைக் கண்காணிப்பாளர் பன்னோ ஜோஷி கூறுகையில்,
சிறையில் இரண்டாம் கட்டமாக 94 கைதிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 23 பேருக்கு தொற்று இருப்பது சனிக்கிழமை இரவு உறுதி செய்யப்பட்டது.
அறிகுறி இல்லாதவர்களை சிறையிலேயே தனிமைப்படுத்தி உள்ளோம். மற்றவர்களை மருத்துவமனைகளில் அனுமதிக்க உள்ளோம் என தெரிவித்தார்.
ராஜ்கோட் மத்திய சிறையில் மொத்தம் 1,386 கைதிகள் உள்ளனர். முன்பே, 11 கைதிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.