அதிபர் டொனால்டு டிரம்ப் 
தற்போதைய செய்திகள்

ஜோ பிடனை விட கமலா ஹாரிஸ் மோசமானவர்: டிரம்ப் குற்றச்சாட்டு

ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது என்றும் அவரைவிட ஒரு படி மோசமானவர் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். 

DIN


ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது என்றும் அவரைவிட ஒரு படி மோசமானவர் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். 

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்தத் தோ்தலில், முக்கிய கட்சிகளான ஜனநாயகக் கட்சியின் சாா்பில் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனும், குடியரசுக் கட்சி சாா்பில் இரண்டாவது முறையாக தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இதனிடையே துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுவார் என்று கடந்த வாரம் அதிபர் பதவி வேட்பாளர் ஜோ பிடன் அறிவித்தார் 

இந்த நிலையில் ‘அமெரிக்காவின் அதிபராக ஜோ பிடன் பொறுப்பேற்றால், நமது நாடே சீனாவுக்கு சொந்தமாகிவிடும். அதனால்தான் எனக்கு பதிலாக அவா் வெற்றி பெற வேண்டுமென்று சீனா விரும்புகிறது’ என்றாா்.

இந்நிலையில், நியூயார்க் காவல் நலன் சங்கத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் டிரம்ப் பேசுகையில்,  ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது. அவர் உடனடியாக அமெரிக்காவில் ஒவ்வொரு காவல் துறையையும் அகற்றுவதற்கான சட்டத்தையும் இயற்றுவார், உங்களுடைய  மரியாதையையும், கவுரவத்தையும் இருவரும் பறிக்கின்றன. ஜோ பிடனைவிட  துணை அதிபராகப் போட்டியிடும் கமலா ஹாரிஸ் "ஒரு படி மோசமானவர்". இருவருமே காவல் துறைக்கு எதிராக செயல்பட கூடியவர்கள்.  இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸைவிட எனக்கு அதிகமான இந்திய வம்சாவளியினர் ஆதரவு உள்ளது என்றும் டிரம்ப் கூறினார். 

துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டதும், தேவை இல்லாமல் அமெரிக்க குடியுரிமை குறித்து பிரச்னையை கிளம்பியவர் டிரம்ப், கமலா ஹாரிஸை வேட்பாளராக தேர்வு செய்வதற்கு முன்பு ஜனநாயக கட்சியினர் இந்த விவகாரம் குறித்து நன்கு ஆய்வு செய்திருக்க வேண்டும் என்று கமலா ஹாரிஸ் எதிராக டிரம்ப் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT