முகப்பு
தற்போதைய செய்திகள்

பொது முடக்கம்: தேனியில் வெளிச்சோடிய சாலைகள்

தேனியில் தளர்வில்லா பொது முடக்கத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை வாகனப் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
தேனியில் வெளிச்சோடிய சாலைகள்
பகிர்:

தேனியில் தளர்வில்லா பொது முடக்கத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை வாகனப் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

தேனியில் தளர்வில்லா பொது முடக்கத்தை முன்னிட்டு கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பெட்ரோல் விற்பனை நிலையம், உணவகம் ஆகியவை மூடப்பட்டுள்ளது. மருந்துக் கடைகள், மருத்துவமனை, அம்மா உணவகம், பால் விற்பனை நிலையம் ஆகியவை மட்டும் திறக்கப்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டமின்றி சாலைகளை வெறிச்சோடி காணப்படுகிறது.

பிரதானச் சாலைகளில் காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை சந்திப்புகள் மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் காவலர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →