உ.பி. : சுதந்திர தினத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை
நாடு முழுவதும் 74வது சுதந்திர தினவிழா கொண்டாடிய நேரத்தில் உத்தர பிரதேசத்தில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்துள்ளனர்.
தற்போதைய செய்திகள்உ.பி. : சுதந்திர தினத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை
நாடு முழுவதும் 74வது சுதந்திர தினவிழா கொண்டாடிய நேரத்தில் உத்தர பிரதேசத்தில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்துள்ளனர்.
நாடு முழுவதும் 74வது சுதந்திர தினவிழா கொண்டாடிய நேரத்தில் உத்தர பிரதேசத்தில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் உள்ள இசனகரில் வெள்ளிக்கிழமை ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பின்னர், இசனகரில் உள்ள கரும்பு தோட்டத்தில் இருந்து சிறுமியின் உடலை காவல்துறையினர் மீட்டனர்.
லக்கிம்பூர் கெரியின் காவல்துறை கண்காணிப்பாளர் சத்யேந்திர குமார் கூறுகையில், 13 வயது சிறுமியின் உடல் இசனகரில் உள்ள கரும்பு வயலில் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியை சந்தோஷ் யாதவ் மற்றும் சஞ்சய் கவுதம் ஆகிய இருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர்.
அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 (கொலை) மற்றும் பிரிவு 376(டி) (பாலியல் வன்கொடுமை) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.