முகப்பு
தற்போதைய செய்திகள்

போடியில் தளர்வில்லா முழு பொதுமுடக்கம்: கூட்டம் கூட்டமாக செல்லும் பொதுமக்கள்

போடியில் ஞாயிற்றுக்கிழமை தளர்வில்லா பொதுமுடக்கம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், விதிகளை மீறி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
போடியில் தளர்வில்லா பொதுமுடக்கமான இன்றும் விதிகளை மீறி கூட்டம் கூட்டமாக செல்லும் பொதுமக்கள்.
பகிர்:


போடி: போடியில் ஞாயிற்றுக்கிழமை தளர்வில்லா பொதுமுடக்கம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், விதிகளை மீறி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. போடி பகுதியில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை தளர்வில்லா பொதுமுடக்கு அறிவித்துள்ள நிலையில் போடியில் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

போடி பகுதியில் கடைகள் மூடப்பட்டிருந்தாலும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வந்தனர். போடி புதூர், பழைய பேருந்து நிறுத்தம், போஜன் பார்க், கருப்பசாமி கோவில், வஞ்சி ஓடை தெரு, குப்பிநாயக்கன்பட்டி, திருமலாபுரம் ஆகிய பகுதிகளில் எவ்வித அச்சமும் இன்றி, முகக் கவசம் அணியாமல் கூட்டம் கூட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சாலையோரங்களிலும் பலர் கூட்டமாக நின்றபடியும், செய்தித்தாள் வாசித்தபடியும் நின்றிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் அதிகமாக இயக்கப்பட்டன. தடையை மீறி இறைச்சி கடைகள் அதிகமாக செயல்பட்டது. மருந்தகங்கள், அம்மா உணவகம், பால் விற்பனை வழக்கம்போல் செயல்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →