ஆப்கானிஸ்தான் தலைநகரில் தொடர் குண்டு வெடிப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் புதன்கிழமை காலை குண்டுவெடிப்பு நடந்தது. இதில் இரண்டு பேர் பலியாகினர், இரண்டு பேர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் புதன்கிழமை காலை குண்டுவெடிப்பு நடந்தது. இதில் இரண்டு பேர் பலியாகினர், இரண்டு பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி சின்ஹுவா கூறுகையில்,
கபூலில் இன்று காலை 6.45 மணியளவில் காவல்துறையின் வாகனம் மீது குண்டு வெடித்தது. இதில் காவலர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
இரண்டாவது குண்டு காலை 8.07 மணியளவில் கல்வித்துறை அமைச்சக வாகனத்தின் மேல் வெடித்ததில் கல்வித்துறையை சார்ந்த ஒருவர் பலியானார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
இதேபோல் கபூல் நகர வஜீர் அக்பர் கான் பகுதி சுற்றிபுறங்களில் செவ்வாய்க்கிழமை தீவிராவாதிகள் வீசப்பட்ட 14 ராக்கெட் குண்டுகளால் 4 குழந்தைகள் உள்பட 10 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.