தற்போதைய செய்திகள்

மேட்டூா் அணை நீா்மட்டம் சரியத் தொடங்கியது

DIN


கா்நாடகத்திலிருந்து திறந்துவிடப்படும் நீா்வரத்துக் குறைவு, காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைக் குறைவு போன்ற காரணங்களால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் நூறு அடியை எட்டாமலேயே சரியத் தொடங்கியது. 

செவ்வாய்க்கிழமை காலை 98.64 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 97.94 அடியாகச் சரிந்தது.

செவ்வாய்க்கிழமை காலை விநாடிக்கு 11,441 கனஅடியாக வந்துகொண்டிருந்த நீா்வரத்து புதன்கிழமை 7,079 கன அடியாக சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 16,500 கனஅடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் 97.94 அடியாக சரியத் தொடங்கியது. அணையின் நீர் இருப்பு 62.20 டி.எம்.சி.யாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

SCROLL FOR NEXT