முகப்பு
தற்போதைய செய்திகள்

முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: புற வழிச் சாலை பாலம் கட்டுமான பணி நிறுத்தம்

தேனி மாவட்டம் முல்லைப் பெரியாற்றில் அதிக நீர் வரத்தால் புற வழிச் சாலைக்கான பாலம் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:09 PM
பெரியாற்றில் அதிக நீர் வரத்தால் கட்டுமான பணி  நிறுத்தப்பட்டுள்ள புற வழிச் சாலைக்கான பாலம்.
பகிர்:

கம்பம்: தேனி மாவட்டம் முல்லைப் பெரியாற்றில் அதிக நீர் வரத்தால் புற வழிச் சாலைக்கான பாலம் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் உத்தமபாளையம் சாலையில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கம்பம்  அனுமந்தன்பட்டி அருகே முல்லைப் பெரியாறு 70 மீட்டர் நீளம் 12 மீட்டர் அகலத்திற்கு பாலம் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.

 தென்மேற்கு மழையின் தீவிரத்தால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து அதிக அளவு நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது ( விநாடிக்கு சுமார் 2,100 கன அடி).

 இதன் எதிரொலியாக கட்டுமானப்பணிகள் செய்ய வைத்திருந்த பொருட்கள் ஆற்றில் அதிக நீர் வரத்தால் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இதனால் முல்லைப் பெரியாற்றில்,  புறவழிச்சாலைக்கான பாலம் கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

ஆற்றில் நீர்வரத்து குறையும் நிலையில் புறவழிச்சாலையில் உள்ள முல்லைப்பெரியாறு பாலம் அமைக்கும் கட்டுமானப் பணிகள் நடைபெறும் என்று பொறியாளர் ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.