மேட்டூர் அணைக்கு நீா்வரத்து சரிவு
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால், மேட்டூர் ஆணைக்கு நீா்வரத்து 7,271 கனஅடியாக சரிவடைந்துள்ளது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால், மேட்டூர் அணைக்கு நீா்வரத்து 7,271 கனஅடியாக சரிவடைந்துள்ளது.
கா்நாடக மாநிலம் குடகு, கபினி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய காவிரி நீரின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை குறைந்து போனதால் கா்நாடகத்தின் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு வரும் நீரின் அளவு குறைந்தது . இதன் காரணமாக அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டது.
இதன் காரணமாக தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை விநாடிக்கு 27 ஆயிரத்து 845 கன அடியாக இருந்த நீரின் அளவு, சனிக்கிழமை காலை 7 ஆயிரத்து 271 கனஅடியாக சரிந்தது. பாசனத்தேவை அதிகரித்ததால் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 16,500 கனஅடியிலிருந்து 18,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 99.15 அடியாகவும், அணையின் நீா் இருப்பு 63.74 டி.எம்.சியாக உள்ளது.