விநாயகர் சதுர்த்தி விழா: சேலம் இல்லத்தில் சிறப்பு பூஜை செய்து முதல்வர் வழிபாடு
விநாயகர் சதுர்த்தியையொட்டி சனிக்கிழமை சேலம் திருவகவுண்டனூர் இல்லத்தில் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வழிபட்டார்.
சேலம்: விநாயகர் சதுர்த்தியையொட்டி சனிக்கிழமை சேலம் திருவகவுண்டனூர் இல்லத்தில் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வழிபட்டார்.
சேலம் திருவகவுண்டனூர் இல்லத்தில் இன்று சனிக்கிழமை காலை விநாயகர் சதுர்த்தி பூஜை நடைபெற்றது. களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து, தீபாராதனை காட்டி, தோப்புக்கரணம் போட்டு குடும்பத்தினருடன் முதல்வர் பழனிசாமி வழிபட்டார்.
பூஜையின் போது முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் முகக்கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியை பின்பற்றிம் வழிபட்டனர்.