முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்திய எல்லைக்குள் நுழைந்தவர்கள் பாதுகாப்புப் படையால் சுட்டுக் கொலை

பஞ்சாபில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் இன்று காலை நுழைய முயன்ற 5 பேர் எல்லைப் பாதுகாப்புப் படையால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:10 PM
கோப்புப்படம்
பகிர்:

பஞ்சாபில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் இன்று காலை நுழைய முயன்ற 5 பேர் எல்லைப் பாதுகாப்புப் படையால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் கூறுகையில்,

டர்ன் டரன் இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் 103 வது பிரிவின் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பு பகுதியில் ஆள் நடமாட்டம் காணப்பட்டது.

அப்பகுதியில் தடையை மீறி 5 பேர் பாகிஸ்தான் எல்லை பகுதியில் இருந்து இந்திய பகுதியில் நுழைய முயன்றனர். அதைக் கண்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் அவர்களை சுட்டுக் கொன்றனர்.

மேலும், அவர்களிடமிருந்து துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.