ஈரோடு: இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு
ஈரோட்டில் இன்று இந்து முன்னனி சார்பாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
ஈரோட்டில் இன்று இந்து முன்னனி சார்பாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
ஈரோட்டை பொறுத்தவரை இந்து முன்னணி சார்பில் மாநகர் பகுதியில் 100 இடங்களிலும் மாவட்டம் முழுவதும் ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம்.
பின்னர் அந்த சிலையை ஊர்வலமாக எடுத்து நீர் நிலைகளில் கரைப்பார்கள். ஆனால் இந்த வருடம் கரோனா தொற்றின் தாக்கம் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சமூக இடைவேளை உடனே சதுர்த்தி விழா கொண்டாடப்படும் என்று இந்து முன்னணி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று சம்பத் நகரில் இந்து முன்னணி நிர்வாகிக்கு சொந்தமான இடத்தில் வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
சிறிய அளவிலான விநாயகர் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில் நிர்வாகிகள் வழிபட்டனர். மாவட்ட செயலாளர் வக்கீல் முரளி, பாரதிய ஜனதா கட்சியின் மாநில முன்னாள் பிரச்சார அணி தலைவர் சரவணன் உள்பட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதில் அனைவரும் சமூக இடைவெளி கடைப்பிடித்து வழிபட்டனர். காவால்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதைப்போல் மாநகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட இடங்களிலும் , மாவட்டம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
ஈரோட்டில் விநாயகர் சிலைகளை பவானி ஆறு, காவிரி ஆறுகளில் கரைப்பது வழக்கம். இந்த வருடம் ஊர்வலமாக செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் தனித்தனியாக பவானி ஆறு, காவிரி ஆற்றில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு சிலர் இன்று மாலை முதல் நீர்நிலைகளில் சென்று சிலையை கரைக்கிறார்கள். வாய்க்கால்களில் பாசனத்திற்காக தண்ணீர் செல்வதால் பிளாக்குகளில் சிலைகளை கரைக்க கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. காலிங்கராயன் வாய்க்கால், கீழ்பவானி வாய்க்கால், தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் விநாயகர் சிலை கரைக்க அனுமதி இல்லை. ஈரோடு மாநகர் பகுதியில் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன.