சாலை விபத்தில் சாலை பணியாளர் சாவு
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் வியாழக்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் சாலை பணியாளர் ஒருவர் உயிரிழந்தார்.
வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் வியாழக்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் சாலை பணியாளர் ஒருவர் உயிரிழந்தார்.
வெள்ளக்கோவில் கரூா் சாலை கிழக்கு காந்தி நகரைச் சேர்ந்தவர் பீட்டர் (55). நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர். இவர் தனது இருசக்கர வாகனத்தில் கோவை - கரூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே அவ்வழியே வந்த சரக்கு வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது சடலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
வெள்ளக்கோவில் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.