முகப்பு
தற்போதைய செய்திகள்

கம்பம்: 7 பேரை விடுதலை செய்யகோரி  நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்பாட்டம் 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யகோரி கம்பத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஆகஸ்ட், 2020 at 5:48 PM
7 பேரை விடுதலை செய்யகோரி  நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்பாட்டம் 
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:42 PM

கம்பம்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யகோரி கம்பத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கம்பம் நகர நாம் தமிழர் கட்சி சார்பில் போக்குவரத்து சிக்னல் அருகே செங்கொடியின் 9 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யகோரி ஆர்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார்.
கம்பம் தொகுதி செயலாளர் குணசேகரன், நகரச்செயலாளர் தங்கபாண்டி, ஒன்றிய செயலாளர் ராம்குமார் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.