முகப்பு
தற்போதைய செய்திகள்

அருப்புக்கோட்டையில் சிவலிங்கத்தில் கண்கள் தோன்றியதாகப்  பரபரப்பு

அருப்புக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு வெகுநேரம்வரை கோவிலொன்றில் சிவலிங்கம் கண்கள் திறந்து காட்சி தந்ததாகக் கூறப்பட்டதால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சிவனை தரிசனம் செய்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
அருள்மிகு ஸ்ரீமத் ஏனாதி நாயனார் திருக்கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு வெகுநேரம்வரை கண்கள் திறந்து காட்சி தந்ததாகக் கூறப்பட்ட சிவலிங்கம்
பகிர்:

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு வெகுநேரம்வரை கோவிலொன்றில் சிவலிங்கம் கண்கள் திறந்து காட்சி தந்ததாகக் கூறப்பட்டதால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சிவனை தரிசனம் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஸ்ரீஅமுதலிங்கேஸ்பரர் கோவிலிலிருந்து செம்பட்டி செல்லும் சாலையில் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்றின் அருகே தனியாருக்குச் சொந்தமான அருள்மிகு ஸ்ரீமத் ஏனாதி நாயனார் திருக்கோவில் (சிறிய கோவில்) அமைந்துள்ளது.

இங்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை வழக்கம்போல சிறப்பு அபிஷேகம், தீப, தூப ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் நடைபெற்றதாம். அப்போது சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த சிவலிங்கம் கண்களைத் திறந்து பார்ப்பதுபோல இருந்தது.

இதனால் அப்போது தரிசனத்தில் இருந்த பக்தர்கள் இத்தகவலை அக்கம் பக்கம் கூறினர். இச்செய்தி அதிவேகமாகப் பரவியதால் அக்கோவிலைச் சுற்றியுள்ள குடியிருப்புகளிலிருந்தும் ஏராளமான சிவ பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர்.

அவர்களும் தாங்கள் பார்த்தாகக் கூறவே நகரின் பல பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஒருபுறம் பொதுமக்கள் பக்திப்பரவசத்துடன் சிவதரிசனம் செய்து கொண்டிருக்கையில், அப்போது சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாததாக மற்றொருபுறம் சில சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.

இதனிடையே கோவிலில் சிவலிங்கம் கண்களைத் திறந்து பார்த்த செய்தி அருப்புக்கோட்டை நகரில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முழு கட்டுரையைப் படிக்க →