கம்பம் பகுதியில் நெல் நடவுப்பணிகள் தீவிரம்
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கம்பம் பகுதியில் விவசாயிகள் நெல் நடவு பணிகளில் தீவிரம் காட்டியுள்ளனர்.
கம்பம்: முல்லைப்பெரியாறு அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கம்பம் பகுதியில் விவசாயிகள் நெல் நடவு பணிகளில் தீவிரம் காட்டியுள்ளனர்.
தேனி மாவட்டம் லோயர் கேம்பில் தொடங்கி பழனிசெட்டிப்பட்டி வரை முல்லைப்பெரியாறு அணையின் பாசனத்தின் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெருகின்றன. ஆண்டு தோறும் ஜூன் மாதம் முதல்போக சாகுபடி பணிகள் தொடங்கும்.
அதன்படி இந்த ஆண்டு வழக்கம் போல் ஜூன் மாதம் முதல் போக சாகுபடிக்கு விவசாயிகள் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை.
Advertisement
இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து முல்லைப்பெரியாறு நீர்வரத்து ஏற்பட்டு அணையின் நீர் மட்டம் உயர்ந்தது இதையடுத்து கடந்த 13ம் தேதி முதல்போக சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தண்ணீர் திறந்துவிடப்பட்டதன் காரணமாக கம்பம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களான சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்ப கவுண்டன்பட்டி உள்ளிட்ட ஊர்களில் நெல் நாற்றாங்கால் அமைக்கப்பட்டன.
இதிலிருந்து எடுக்கப்படும் நாற்றுகள் அனைத்தும் தற்போது வயல்களில் நடவு செய்யப்படுகின்றன. இதன் மூலம் விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கு வேலை ஏற்பட்டுள்ளது.