தற்போதைய செய்திகள்

செளதியில் 6 லட்சம் அரசு ஊழியர்கள் அலுவலகம் திரும்பினர்

DIN

கரோனா தொற்று பாதிப்பால் வீட்டில் இருந்து பணிபுரிந்த செளதி அரசு ஊழியர்கள் 6 லட்சம் பேர் இன்று அலுவலகத்திற்கு திரும்பி உள்ளனர்.

இதுகுறித்து செளதி மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,

ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் அனைத்து பொதுத்துறை ஊழியர்களும் அலுவலகம் வரவேண்டும். மேலும், நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட பகுதியில் இருப்பவர்கள் வீட்டிலிருந்து பணி புரியலாம் என தெரிவித்துள்ளது.

ஒரு அலுவலகத்தில் அதிகபட்சமாக 25 சதவீத ஊழியர்கள் மட்டுமே வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும். மேலும், அலுவலகங்களில் கைரேகை வைத்து வருகை பதிவு செய்யும் முறையை பயன்படுத்தக்கூடாது என அறிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணைப்பு வழங்காமலே 4ஆயிரம் பேரிடம் குடிநீா் வரி வசூலிப்பு!

செம்பட்டி அருகே ரூ.98 கோடியில் கூட்டுறவு கலை, அறிவியல் கல்லூரி

கொடைக்கானலில் வெப்ப நிலை அதிகரிப்பு தடுக்கப்படுமா?

போடியில் பலத்த மழை

கம்பம் சித்திரைத் திருவிழாவில் திமுகவினா் நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT