தமிழக தலைமைச் செயலருடன் மத்திய அமைச்சரவை செயலர் ஆலோசனை
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமைச் செயலர் சண்முகத்துடன் மத்திய அமைச்சரவை செயலர் ராஜீவ் கவுபா செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
தற்போதைய செய்திகள்தமிழக தலைமைச் செயலருடன் மத்திய அமைச்சரவை செயலர் ஆலோசனை
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமைச் செயலர் சண்முகத்துடன் மத்திய அமைச்சரவை செயலர் ராஜீவ் கவுபா செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமைச் செயலர் சண்முகத்துடன் மத்திய அமைச்சரவை செயலர் ராஜீவ் கவுபா செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கன்னியாகுமரியில் இருந்து கிழக்கே 930 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது, இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறும் என்றும், டிசம்பர் 3ம் தேதி காலை குமரிக்கடல் பகுதிக்கு வரும் என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக, 1.12.2020 முதல் 4.12.2020 ஆகிய நாட்களில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் மற்றும் இதர மாவட்டங்களிலும், வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் கன மழை பெய்யக் கூடும் மற்றும் கேரளத்திலும் புயலின் தாக்கம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தமிழகம் மற்றும் கேரள அரசு சார்பில் செய்யப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரவை செயலர் ராஜீவ் கவுபா, தமிழக தலைமைச் செயலர் சண்முகம் மற்றும் கேரள தலைமைச் செயலருடன் ஆலோசனை நடத்தினார்.