பஞ்சாபில் மோட்டார் வாகன வரி தள்ளுபடி: மாநில அரசு
பஞ்சாபில் மோட்டார் வாகன வரியை முழுமையாக தள்ளுபடி செய்து மாநில அரசு உத்தரவு புதன்கிழமை பிறப்பித்துள்ளது.
பஞ்சாபில் மோட்டார் வாகன வரியை முழுமையாக தள்ளுபடி செய்து மாநில அரசு உத்தரவு புதன்கிழமை பிறப்பித்துள்ளது.
கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து வகையான தொழில்துறையினரும் நிதி நெருக்கடியில் இருந்து வருகின்றனர். அதில் சரக்கு வாகன உரிமையாளர்களும், பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனத்தினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைக் கருத்தில் கொண்டு சரக்கு வாகனம் மற்றும் கல்வி நிறுவன வாகனங்களுக்கான மோட்டார் வாகன வரியை பஞ்சாப் அரசு முழுவதுமாக ரத்து செய்துள்ளது.
வரி தள்ளுபடி குறித்து பஞ்சாப் அரசு வெளியிட்ட உத்தரவில்,
“கரோனா பேரிடர் காலக்கட்டத்தில் வாகன உரிமையாளர்களுக்கு உதவும் நோக்கில் அனைத்து வகையான சரக்கு வாகனங்கள், பயணிகள் பேருந்து மற்றும் பள்ளி, கல்லூரிப் பேருந்துகளுக்கு, மார்ச் 23 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 வரையிலான மோட்டார் வாகன வரி தள்ளுபடி செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.” என தெரிவித்தனர்.