‘490 நிவாரண முகாம்கள் தயார்’: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
புரெவி புயலால் பாதிக்கப்படும் மக்களை தங்கவைக்க தென் மாவட்டங்களில் 490 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
புரெவி புயலால் பாதிக்கப்படும் மக்களை தங்கவைக்க தென் மாவட்டங்களில் 490 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த புரெவி புயல், குமரிக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.
இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவுக்கு மேல் பாம்பன் - கன்னியாகுமரி இடையே தமிழக கடற்கரையை புரெவி புயல் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தென் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில்,
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்குவதற்காக 490 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. இதில், 2 லட்சம் மக்கள் தங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புயலின் காரணமாக மக்கள் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.
மேலும், புயல் குறித்து மாவட்ட நிர்வாகம் அல்லது மாநில அரசு தெரிவிக்கும் செய்திகளே உறுதியானவை. சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை மக்கள் நம்பவேண்டாம் என தெரிவித்துள்ளார்.