முகப்பு
தற்போதைய செய்திகள்

3 மணி நேரத்தில் பாம்பனைப் புயல் தாண்டும், குமரி இடையே இன்றிரவு அல்லது அதிகாலை கரை கடக்கும்

பாம்பனுக்கு மிக அருகில் இருக்கும் புரெவி புயல் இன்னும் 3 மணி நேரத்தில் பாம்பனைக் கடந்து செல்லும், பாம்பனுக்கும் குமரிக்கும் இடையே இன்றிரவு அல்லது அதிகாலை கரையைக் கடக்கும் என்கிறது வானிலை மையம்.

Updated On : 3 டிசம்பர், 2020 at 4:51 PM
புரெவி புயல்
பகிர்:

பாம்பனுக்கு மிக அருகில் நிலைகொண்டுள்ள புரெவி புயல் இன்னும் 3 மணி நேரத்தில் பாம்பனைக் கடந்து செல்லும், பாம்பனுக்கும் குமரிக்கும் இடையே இன்றிரவு அல்லது அதிகாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த புரெவி புயல், குமரிக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.

இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவுக்கு மேல் பாம்பன் - கன்னியாகுமரி இடையே தமிழக கடற்கரையை புரெவி புயல் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

இந்நிலையில், பாம்பன் அருகே 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் இன்னும் 3 மணி நேரத்தில் பாம்பனுக்கு குறுக்கே செல்லும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் பகுதியில் கடந்து செல்லும் போது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசக் கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.