முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் மேலும் 1,391 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 1,391 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:02 PM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் புதிதாக 1,391 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,87,554 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மேலும் 356 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பிலும் 15 பேர் நோய்த் தொற்றால் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 11,762 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,426 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,64,854 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 10,938 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →