வங்கதேச கல்வித்துறை அமைச்சருக்கு கரோனா
வங்கதேசத்தின் கல்வித்துறை அமைச்சர் திப்பு மோனிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் கல்வித்துறை அமைச்சர் திப்பு மோனிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அமைச்சரின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில்,
கல்வித்துறை அமைச்சருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார் என தெரிவித்தார்.
வங்கதேசத்தில் இதுவரை மொத்தமாக 479,743 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் 6,874 பேர் பலியாகியுள்ளனர்.