முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் 4-ஆம் கட்ட தேர்தல்: 50.08% வாக்குப்பதிவு

ஜம்மு-காஷ்மீரில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் 4-ஆம் கட்ட தேர்தலில் 50.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
4-ம் கட்டத் தேர்தலில் வாக்களிக்க காத்திருந்த கிராம மக்கள்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் 4-ஆம் கட்ட தேர்தலில் 50.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

யூனியன் பிரதேசத்தில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதில், 50.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாநில தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, டி.டி.சி தேர்தலின் முதலாம் கட்ட தேர்தலில் 51.46 சதவீதமும், இரண்டாம் கட்டத்தில் 48.62 சதவீதமும், மூன்றாம் கட்டத்தில் 50.53 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

டிசம்பர் 19-ம் தேதி வரை மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 22 அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →